ஊர்ந்து செல்லும் உயிர், பறக்க நினைக்கும் மனம், பாயத்துடிக்கும் ஆசை
நிலையற்ற உலகில்
நிறுத்தப்படாமல்
சுழன்று
கொண்டேயிருக்கும்
கால தேவனின் முதுகில்..,
நிலைக்காதா வாழ்வு என்று
ஏக்கத்துடன் சவாரி
செய்து கொண்டே
நாமெல்லாம்...!
நேரத்தின் வேகத்தை
பார்க்கையில்...
நிமிடங்கள் எல்லாம்...
மணிகளாகவோ, நாட்கள்
மாதங்களாகவோ அன்றி..
நேரடியாக வருடங்களாகவே
நகர்கின்றனவோ என்று
சந்தேகம் கொள்ள வைக்கின்றது...!?
இதோ இன்னும் சில
நாட்களை
அண்மித்துக்கொண்டு
புதிய விடியலுக்காய் நாம்...!
கடந்த காலத்தில் பற்ற
மறந்த வெற்றிகளை
இதோ எட்டி பிடிக்க போகிறேன் என்று முட்டாள்தனமாய்
எண்ணவில்லை நான்..
ஏனெனில் காலத்திற்கும்
என் தமிழிற்கும்
துளியாக இருக்கும்
'வருடம்'
மனிதனுக்கு மலையாகத்தான்..!
ஒவ்வொரு வருடங்களிளும்
வயதையும்..,
சந்தர்ப்பங்களையும் தான்
இழந்து நிற்கின்றோம்..!!
இழந்தவைகள்..,
படிப்பினைகளேயன்றி..
வேதனைகளில்லை..!!
இனிவரும் வருடங்களின்
ஒவ்வொரு துளிகளையும்
வாழ ஆசைப்படுகின்றேன்..!
பார்க்கலாம்..,
நாட்கள்..
பறக்க போகின்றனவோ
இல்லை நகரப்போகின்றனவோ என்று....