என்றும் அழியா நட்போடு...
நட்பே...
நேற்றைய பொழுது...
மலர்ந்ததுந்தன் முகம்
மகிழ்வில்...
நிறைந்ததெந்தன் மனம்
நெகிழ்வில்...
இன்றைய பொழுது...
கூடிவிட்ட மேகமது
பொழியாதோ...
துவண்டுவிட்ட மனப்பயிர்தான்
செழிக்காதோ...
தேடிவிட்ட நட்புமது
கிடைக்காதோ...
குழம்பிவிட்ட மனமதுதான்
தெளியாதோ...
நாளைய பொழுதுதான்
புலராதோ இனிதாக
என்றும் அழியா உன் நட்போடு...