நான் கேட்டதும் நீ கொடுத்ததும்

காற்றாக கரைந்து வா என்றேன்..!!!
கார்பன் மோனாக்சைடாய் மட்டும் வருகிறேன் என்றாள்...???
நீராக அருந்த வா என்றேன்..!!!
கடல் நீராய் வருகிறேன் என்றாள்...???
விதையாக முளைத்து வா என்றேன்...!!!
அரளி விதையாய் முன் நின்றேன் என்றாள்...???
கண்முன்னே காண வா என்றேன்..!!!
உன் கண் இமையே நான்தானே என்றாள்...????
கதைப் பேச ஓடிவா என்றேன்..!!!
என் மௌனவிரதமே உன்னுடன் தான் என்றாள்..???
இசையாக இசைந்து வா என்றேன்..!!!
இம்சையாக வருகிறேன் என்றாள்..???
ஒலியாக கேட்க வா என்றேன்..!!!
தலைவலியாக வருகிறேன் என்றாள்..???
மழையாக நனைக்க வா என்றேன்..!!!
அமில மழையாகி நனைக்கிறேன் என்றாள்..???
பரிசளித்து பழக வா என்றேன்..!!!
பலர்முன் ஏன் பாசாங்கு என்றாள்..???
கண்ணிமைக்காமல் கண்டுகொண்டிருந்தேன்..!!!!
கண்ணிமை மூடும்வரை
கரம் பிடிப்பேன் என்றாள்..!!
கண்ணிமைக்கும் கணத்தில்..
காணவில்லை கண்மணியை..!!!
கடைசியாக
கண்ணிமை மூடும்வரை
கரம் பிடிப்பாயா என
கேட்காதது தான் என் குற்றமோ..????