கவிதை எழுத

" கவிதை எழுத..."

கவிதை எழுத வந்தவர் எல்லாம்
எதை எதையோ எழுதுகிறார்
காசு கொடுத்து நம்ம ஆளும்
அதை வாங்கிப் படிக்கிறார்

கவிதை என்றால் என்ன என்று நினைக்கிறார்
கவிதை என்று கனவும் கற்பனையும் வளர்க்கிறார்
கவிதை என்று பொய்க்கு விருது கொடுக்கிறார் - கழிசடைக்
கவிதை என்று மெய்யின் தரம் ஒழிக்கிறார்

கடவுள் என்று கவிதைச் சூதில் களிக்கிறார்
கடவுள் என்று கவிதை ஊழைப் புகழ்கிறார்
கடவுள் என்று கவிதை ஜாதி துதிக்கிறார்
கடவுள் என்று கவிதை வாழத் துடிக்கிறார்

மதம் என்று கவிதையதை மனதில் புதைக்கிறார்
மதம் என்று கவிதையதை தினமும் விதைக்கிறார்
மதம் என்று கவிதையதை பேச்சில் கரைக்கிறார்
மதம் என்று கவிதையதை மூச்சாய் சுவைக்கிறார்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (14-Oct-15, 10:37 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kavithai elutha
பார்வை : 95

மேலே