தொலைபேசி

விஞ்ஞானம்
கொடுத்த அழகிய உலகம்
என் கைக்குள்......

நான் தேடும் நபர்களும்
என்னை தேடுபவர்களையும்
இமைக்கும் நேரத்தில்
சேர்த்துவைக்கும்....

அமுதம் விஷம் இரண்டும்
உண்டு.....
சிலருக்கு அட்ஷ்யப்பாத்திரம்
சிலருக்கு எட்டாத கனி.....

நம்மால் ஆளப்படும்
வரை கையில் சொர்க்கம்....
தொலைபேசி நம்மை
ஆட்சி செய்தல் விழிகள்
இருந்தும் பார்வைகள் பறிபோகும்..!

எழுதியவர் : (18-Oct-15, 6:54 pm)
Tanglish : tholaipesi
பார்வை : 85

மேலே