கும்மிப் பாட்டு
சுற்றி நடப்பவைகள் எதுவும்
சுற்றும் பூமியில் நம்மை
சற்றும் சலனப் படுத்துவதில்லை..
முற்றும் அவை நமக்கு சம்பந்தம் இல்லை என்பதாலா..
கற்றும் கேட்டும் அறிந்த மனிதத்தை தொலைத்ததாலா..
பற்றும் பாசமும் எல்லாம் சுயத்தின் மீதும் ..
மற்றும் சூழ்ந்திருக்கும் உறவுக் கொடிகளோடு மட்டும்
என்னும் வாழ்முறைக்கு எல்லோரும் தெண்டனிட
குற்றம் யார் மீதும் இல்லையென்றே..கும்மியடி நீ ..பாப்பா!