நம்பிக்கை
கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்
நம்பவில்லை நீயா என்று கேள்வி
பத்தாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் இடம்
அப்படியா என்று அலட்சியம்
தொழிற் கல்லூரியில் இரண்டாம் இடம்
சரி என்று கேட்டு கொண்டார்கள்
பாராட்ட மனமில்லை ஒருவருக்கும் .
வெறும் தேர்ச்சி பெற்றவருக்கு கிடைத்த அங்கீகாரம் கூட
கிடைக்கவில்லை எனக்கு.
கூட பயின்றவரெல்லாம் உலகின் பல மூலைகளில்
நான் மட்டும் என் ஊரின் அதே மூலையில்
நம்புங்கள் உங்கள் பிள்ளைகளை !
பாராட்டுங்கள் அவர்தம் வெற்றிகளை !
தொடுவார்கள் வாழ்வின் உச்சங்களை !