அன்றிரவு
தூக்கத்தைத் தூண்டிடும் குளிர்ச்சியான இரவு நேரம்,
நான் மெல்ல மெல்ல நடந்து சென்றேன் ஓர் சாலை ஓரம்,
வட்டமுக வெண்ணிலவை தனக்குள் பொதிந்த வானம்,
அதன் வெண்கதிர் எங்கும் பரவிடும் மேலும் மேலும்...
தூரத்தில் ஓர் விண்மீன் அமர்ந்திருப்பது போல் தோன்றும் பொய்மை;
அருகில் சென்றேன் வியக்கச் செய்தது அது ஓர் அழகிய பெண்மை,
அவள் மேல் நான் காதல்வயப்பட்டது தான் மறுக்கமுடியா உண்மை....
என்னை கண்டதும் வெட்டப்பட்டு கதவில் பாதியும் தெரிந்து ஒளிய;
அவ்வெட்கம் என்னை பூலோகத்தை விட்டு கூட்டி சென்றது வெளியே...
முட்டவிளி பார்வை என் மேல் விட்டெரிந்து நின்றாள்;
நான் சட்டென்று சறிந்தேன்,இதுதான் காதல் என்று உணர்ந்தேன்......
இருளிடும் அமாவாசை தன் கூந்தலுக்குள் மறைத்துவைத்தாள்;
ரோஜாவின் சிவப்பு நிறத்தை உதட்டுக்குள் பூட்டி வைத்தாள்....
என்னவோ?ஏதோ? நான் உன்மேல் பித்தனாக மாறிவிட்டேன்;
காதலை எதிர்த்தவன் நான் இன்று உனக்காக காதல் கோட்டை கட்டிவிட்டேன்.....
என் வாழ்வில் இவ்விரவைப்போல் நான் எங்கும் கண்டதில்லை;
உன்னை தவிர இவ்வுலகில் வேறேதேனும் பெரிதுமில்லை...
என் இதயத்தை உன்னிடத்தில் துளைத்துவிட்டேன்;
அதற்கு ஈடாக உன் இதயத்தை எனக்கு தருவாய் என காத்திருப்பேன்.......
உன்னை எண்ணி எண்ணி இவ்விரவு கழிந்துபோனது;
என் மகிழ்ச்சி கெடுப்பதற்கென கதிரவன் உதயமாகிவிட்டானோ?
மறக்க இயலா நினைவுகளை என் நெஞ்சில் புதைத்துவிட்டாய்;
உன்னை தவிர இவ்வுலகத்தையே மறந்து நிற்கிறேன்,
.
.
.
.
அவ்விரவை எதிர்பார்த்து........