உரிமையும் பரிவும்

தாத்தா செத்ததும்
ஒலக்க ஒரல்
அம்மி ஆட்டுக்கல்லுன்னு
ஒவ்வொன்றுக்கும் போட்டி...
கறவமாடும் கண்ணும் எனக்கு
காளையும் கிடாரியும் உனக்கு
அப்பாவும் சித்தப்பாவும்
அத்தனை அடிதடி....கோனி
பாயில சுருண்டு கிடக்கும்
பாட்டிய
எனக்கு எனக்குன்னு
யாரும் சொல்லக் காணோம்.....

எழுதியவர் : பதிவு : செல்வமணி (29-Oct-15, 12:43 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 85

மேலே