பயண நேரம்
பயண நேரம்🚂🚋🚋🚋🚋
""""""""""""""""''""""""""""""""""""""""""""""""""""
தொடர்வண்டி பயணத்தில்,
வெளியூருக்கு பஞ்சம் பொழைக்கப்போன...
ஒருவர்...
உள்ளூர் திரும்புகிறார்...
ஒரு தலைமுறைக்குப் பிறகு,
தன் குடும்பத்துடன்...
பயணநேரத்தில்...
தன் சட்டைப்பையிலிருக்கும்,
பேனாவின் உதவியால்...
ஏதோ கிறுக்க முயற்சிக்கிறார்,
தன் பழைய நினைவுகளை...!
கரிசல்காட்டு பாதையிலே...
ஒரு மைல் தூரத்துல...
இருக்கு அந்தக் கிணறு
எப்பவுமே நாலு பயலுக,
அதுல குளிப்பானுங்க...
ஏலேய்ய்....
குளிக்கிறதா இருந்தா...
ஊர் கம்மாய்ல குளிங்கலே...
குடிக்கிற தண்ணிய,
பாழாக்காதீங்க....
அவ்வப்போது,
கிணற்றின் மேலிருந்து வரும்...
யாரோ ஒருவரின் சத்தம்...!
அந்த வயசுல...
பள்ளிக்கு போறோமோ இல்லையோ,
குளிக்க போவோம்...
இந்த கிணத்துக்கு...!!
மேலிருந்து எட்டி பாத்தா...
தரை தெரியும் அளவுக்கு,
பளபளன்னு தண்ணி...!!!
ஒருநாள் எங்காத்தா...
குடத்துல தண்ணியெடுக்க,
போகயில.....
போகயில....
ஏம்மா தண்ணி பாட்டில,
எந்த பேக்ல வச்ச...
இந்த,
கட்ட பையிலதான் வச்சேன்...
உள்ள காணோமே...
ஏங்க... நீங்க எடுத்தீங்களா...
ஏங்க... உங்களத்தான்....
என்று அவர் மனைவி...
அவரைத்தொட...
போகயில...
என்ற வார்த்தைக்கப்புறம்..
எங்கும் போகாமல்...
என்ன என்று...
அவர்...
தன் மனைவியை கேட்கும் போது...
தொடர்வண்டி அடுத்த நிலைத்தில்,
நின்றது...
எதுக்கு இந்த பரபரப்பு....
ஜன்னலோரம் கை நீட்டி...
தம்பி ஒரு வாட்டர் பாட்டில் தாப்பா...
எவ்வளவு...?
என்றவாறே பாட்டிலை வாங்கி...
மூடியை திறந்து...
மேல்துவாரத்திலிருந்து பார்த்தார்...
பாட்டிலின் அடிப்பாகம் தெரிகிறது சிறுவயதில் குளித்த அதே கிணறு...
💧
இவண்
✒ க.முரளி (spark MRL K)