காதல் பிரிந்த பின் - 2

#‎நண்பா‬

தெரியாமலும் அவளை திட்டி விடாதே!
உன் காதல் நிலா மேல் என்றால்
அவள் காதல் "வானம்" உன் மேல்!

‪#‎பிரிந்த‬ பின் வருந்தி நிற்காமல்
புரிந்து வாழ்வதே காதல்!

காதல் சுகம் சில நாள்,
சுமை பின்னால்;
சுகம் தரும் இன்பம்
சுமை தரும் துன்பம்;

இன்பம் உன்னை உனக்கு உணர்த்தும்,
துன்பம் உன்னை எல்லோருக்கும் உணர்த்தும்,
இனிப்பும் உப்பும் எப்போதுமே உள்கொள்ள ஆகாது,

உன் தகுதி திறமை அறிவு அனுபவம்
நீயே உயர்த்திக்கொள்ள
காதல் ஒரு படகு,

படகுப்பயணம் சில நேர உல்லாசத்திற்குத்தான்,
வாழ்க்கை முழுவதுவும் உல்லாசப்பயணமாக
திறமை என்னும் தேரில் உலா வருவதே முக்கியம்...

காதல் உன் வாழ்வில் இடைவேளை...

முற்பகுதி இனித்தால் பிற்பகுதி கசக்கும்,
முற்பகுதி உவர்ப்பானால் பிற்பகுதி சுவைக்கும்,

இதுவே காதலின் சுயசரிதை... !

எழுதியவர் : செல்வமணி (1-Nov-15, 10:53 am)
பார்வை : 421

மேலே