காதல் முடிவதில்லை

இன்பத்தை தேடியே அலைந்து
திரிந்த காலம் - யாவும்
ஏதோ ஓர் பிம்பத்தின் வழியே
வந்தென்ன மாயம்!


வாழ்க்கையில் தேடல்கள் வந்து
வந்து போகும் - அதை
தேடித் தேடி அலைவதிலே மனம்
தொலைந்து போக கூடும்!


தூண்டிலில் சிக்கிய மீனானதில்
என் மனது -இன்று
வானத்தை நோக்கியே விரிந்ததில்
விடிந்தது என்பொழுது!


சப்தத்தின் இரைச்சலில் வாழ்ந்து
தவித்த எண்ணம் - புவியின்
மௌனத்தில் புதைந்ததில் வாழ்வு
வசப்படுவது திண்ணம்!


சோகத்தை கடந்து மனம் வாழ்ந்து
இருந்த பொழுது - பயணத்தின்
நடுவே உன்னை கரம் பிடித்தது
என் மனது!


நீ என்னை புரிந்து கொள்ளும்
நேரங்கள் எல்லாம் - நான்
உன்னை புரிவதற்கு முயற்சித்த
காலங்கள் ஆகும்!


காலத்தின் கைகளிலே விளங்காய்
இருந்த நாம் - இன்று
காதலின் கைகளுக்கு விளக்காய்
மாறினோம் ஆம்!!


நெஞ்சின் பாரங்கள் இறக்கி
முடிக்கும் முன்னே - பல
காலங்கள் கடந்ததில் என்ன
கண்டேன் பெண்ணே??

நம் பாதையில் பயணங்கள்
முடிவதற்கு முன்னே-இன்று
ஒரு கால்தடம் அழிந்ததில் மனம்
உடைந்து நின்றேன் கண்ணே!!


நம் வாழ்க்கையில் ஆசைகள்
தீர்வதற்க்குள்ளே - நம்
வயதின் எண்கள் பெருகிநின்றது
காலத்தினுள்ளே!!


தசைகள் சுருங்கி நான்
தள்ளாடும் பொழுதில் - நீ
காலத்தை வென்று புதைந்தாய்
மண்ணில் புழுதில்!


நாம் உடலோடும் ,உயிரோடும்
பிரிந்தால் கூட - நம்
காதல் பிரபஞ்சம் முடியும்
வரை ஒயாது!!


வாழ்க்கையின் எல்லை வரை
என்னோடு கடந்திருந்தாய் - இங்கே
பாசங்கள் கண்ணீர் வலிகள் எல்லாம்
நீ தானே உணர்த்தி சென்றாய்!!!

எழுதியவர் : (1-Nov-15, 1:04 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
பார்வை : 83

மேலே