காதலின் எதிரி

சாதியும், மதமும்
காதலுக்கில்லை
என்றார்கள்,
சான்றோர்கள்…….

இருப்பினும்,
சாதியும்,
மதமும்தான்
காதலின் சஞ்சலம்
என நினைத்தேன்....!

ஆனாலும்...,
அதிஷ்டவசமாக.....
நீயும் நானும்
ஓர் சாதி,
ஓர் மதம்....!

நெல்லின்
நிறத்தில் நீ,
எள்ளின்
நிறத்தில் நான்....

ஏனோ...?
நீ
என்னை
உதறித்
தள்ளிய போதும்,
இன்னும்
புல்லின் நிறத்தில்
நம்
நீங்காத
நினைவுகள்...!

ஏனெனில்,
என்
முகம்
பார்க்காமல்
இருந்திருக்கிறேன்... !
ஆனால்
உன் முகம்
பார்க்காமல்
இருந்ததில்லை.... !!

நீயோ……..,
சாதியும்,
மதமும்
ஒன்றானபோதும்,
என்னிடம்
"பணம்
இல்லையென்று"
பார்ப்போரிடமேல்லாம்,
பலமுறை
புறம் பேசினாய்......!
.
வறுமையை
ஒழிக்க
கடுமையாய் உழைத்தேன்
வாரமும்,
மாதமும், நூறாய் போனது..... !

"திரைகடல்
ஓடி
திரவியம்" சேர்த்தேன்
திரும்பி வந்த,
என்னிடம்
சொன்னாய்.....
"உனக்கு
வயதாகிப் போனது" என்று...!

என் காதல்
தோற்ற
பின்புதான் தெரிந்தது,
உண்மையில்,
சாதியும், மதமும்
காதலுக்கு
எதிரியில்லை என்று....!

கடைசியில்…..
உனக்கென்ன
வேண்டும் என்று
உணராமல் போனேன்,
எனக்கென்ற
உன்னை - கிடைக்காமல்
ஆனேன்.

இன்று.... நீ
முகம் தெரியாதவரின்
முகவரியை
அலங்கரிக்கும்
ஓவியமாய்..........
நான் மட்டும்....
தூரிகையும்,
ஓவியமும்
ஒருங்கே.... இழந்த
ஓவியனாய்............!

எழுதியவர் : ஆ. க. முருகன் (1-Nov-15, 8:19 pm)
Tanglish : kathalin ethiri
பார்வை : 172

மேலே