சத்தமில்லாத் தீபாவளி
ஒரு கிண்ண எண்ணையில்
உறக்கம் விழித்த குளியலில்
அப்பா தந்த காலர்ச் சட்டையில்
அம்மா சுட்ட உளுந்து வடையில்
அடுத்த வீட்டு மைசூர்ப் பாகில்
அண்ணன் தங்கையின்
அன்புப் பரிமாறலில்
சீனா சிவகாசிப்
போட்டிகள் புதைய
சிரிக்குது தீபாவளி
சத்தமில்லாமலே
...மீ.மணிகண்டன்