கடுதாசி

கடுதாசி

நாள் :7.3.1977

அன்புள்ள ஏன் பூவாத்தாவுக்கு
உன் பட்டாளத்து மாமன் எழுதும் கடுதாசி...

ஏய் ஆத்தா ஆவரம் பூவே..

உன் நெனப்புதா என் உசுர புடிச்சு வச்சிருக்கு..அங்க நீயும் அப்படிதானு தெரியும்மாத்தா...

ஏன் கூட்டாளி போட்ட கடுதாசில எழுதியிருந்தான்...
அடி பாதகத்தி அரளிவித தின்னுபுட்டனு கடுதாசில பாத்த எனக்கு ஈரகொல நடுங்கிடுச்சு...
கொஞ்சநாள் பொருத்துக ஆத்தா... அது வரைக்கும் நாம ஒன்னா திரிஞ்ச நாபகத்த நெஞ்சு கூட்டுக்குள்ள வச்சுகோ தாயி...

உனக்கு நாபகம் இருக்கா
வெரகு பிரக்க ஒண்டி கரட்டுக்கு போனது
..
களாகா உப்பு வச்சு தின்னது,

மாங்கா மரத்து குடிசையில பழைய கஞ்சி திருடி தின்னது..

உனக்கு தாமர புடிக்கும்னு எடுக்க போய் தாமர சுனையில நீச்ச தெரியாம முங்குனது....

உன்ன அடிச்ச கணக்கு வாத்தியார் சைக்கிள பஞ்சர் ஆக்குனது..

பொரியாத்த வீட்டு கதவுல ரயில் வண்டி விளான்டது...

கண்ணிமார் பாறையில சருகி விளாடும் போது ஏன் டவுசரு கிழிஞ்சத பாத்து சிரிச்ச மண்ணுதிண்ணிய நீ அடிக்க போனது...

பங்குனி பொங்கலுக்கு நீ சோத்து வச்சு வாங்கி தந்த MGR கண்ணாடி....

கள்ளன், போலிஸ் விளாட்டு விளாடும் போது குழும சந்துகுள்ள நீ தந்த முதல் முத்தம்..

இப்படி ஏன் நெஞ்செல்லாம் உன் நெனப்புதான் புள்ள அவிச்சு வச்ச நெல்லாட்டம் நிரஞ்சு கிடக்கு..

நம்ம கருப்பணன் மேல சத்தியமா
வர தைமாசம் இந்த மாமன் மஞ்ச கயிறு உன் கழுத்தில இருக்கும் தாயி..

வரும் போது உனக்கு பிடிச்ச கத்தரிபூ கலரு பாவட தாவணியும், கல்லு வச்ச கம்மலும், முத்து மாலையும் வாங்கியாரேன்....

அதுவரைக்கும் உனக்கு பிடிச்ச சாதிமல்லி ஏன் வீட்டு வாசல்ல இருக்கு அத வாடம பாத்துகோ...

காத்திரு பூவாத்தா...

கண்டிப்பாக பதில் கடுதாசி எழுதவும்..
இப்படிக்கு
உன் நெனப்புல இருக்கும்
உன் பட்டாளத்து மாமன்

எழுதியவர் : நாகராஜன் (12-Nov-15, 6:06 pm)
சேர்த்தது : நாகராஜன் நகா ஸ்ரீ
பார்வை : 271

மேலே