மழைக்காகவே மழையில்

பள்ளி பருவத்தில் .....
ஐயோ மழை வருகிறது!!!
வேகமாக வீட்டிற்கு ஓடு
புத்தகம் அனைத்தும்
நினைந்து விடும்....
ஆம் நான் மழையில் நினைந்தேன்...

அடுத்து ஒரு நாள்
ஐயோ மழை வருகிறது!!!!
வீட்டு முற்றத்தில்
விறகு எல்லாம்
வீணாகி விடுமே
பத்த வைக்க முடியாதே
பத்திரமா எடுத்து வா
அம்மாவின் அலறல்...
ஆம் நான் மழயில் நினைந்தேன்.

மற்றும் ஒரு நாள்.
ஐயோ மழை வருகிறது!!!
மேய போன மாடெலாம்
சாயங்காலம் ஆகியும்
வீடு வந்து சேரல.
மாட்டின் மணி ஓசையோடு
மண்டபத்தில் நின்றேன்.
ஆம் நான் மழையில்
நினைந்தேன்.

இரவு ஒரு நாள்
ஐயோ மழை வருகிறது.!!!
பாட்டம் பாட்டமாய் மழை
ஓட்டைகளை அடைக்லான
வீட்டுகுள தூங்க முடியாதே
ஓட்டை எல்லாம்
அட்டைகள் வைத்து
அடைத்தேன்
ஆம் நான் மழையில் நினைந்தேன்

கோடையில் ஒரு நாள்
ஐயோ மழை வருகிறது!!!!
கொட்டும் மழை நீரை
மொட்டை மாடி குழாய்கள்
மூலம் குடம் குடமாய்
இட்டு வைத்தேன்.
ஆம் நான் மழையில் நினைந்தேன்.

இன்று
ஆஹா மழை வருகிறது!!!
அம்மா நான் மழையில்
நினையட்டுமா ?
என் குழந்தைகளின் குரல்
ம்ம்ம்ம்ம்ம்......
ஆம் நான் மழையில் நினைந்தேன்.
மழைக்காகவே மழையில்.....

எழுதியவர் : Athirstam (19-Nov-15, 6:55 pm)
பார்வை : 58

மேலே