விழியின் வெற்றி

என் காதல்
கோட்டையை கைப்பற்றி...
என் காதல் ராணியை
காதல் சிறை பிடிக்க...!
என் வாளெனும்
எழுதுகோலெடுத்து...!
சிப்பாய்களாய்
சிறு சொல்தொடுத்து...!
போர்க்களமெனும்
வெள்ளைக் காகிதத்தில்...!
என் காதல் கவிதை
கொண்டு
போட்டியிட்டேன்...!
அவளிடத்து...
வீழ்த்திவிட்டாள் அவள்
விழியின் கூர்மை கொண்டு..!
வீழ்ந்துவிட்டேன்
அவள் முதல்
ஒற்றைப்பார்வையிலே...!
"வென்றது
அவள் விழியின்
கூர்மை"