மனிதம் வாழ

மனிதம் வாழ!
******************
உலக மாந்தர் உயர்வு பெற்ற
உன்னத நிகழ்வுகள் பலவற்றை
நினைந்து பார்த்தே உயர்ந்திடவே
பூத்தது டிசம்பர் பூவுலகில் மக்கள்
பூரிக்கும் கொண்டாட்டம் துவங்கியதே!
மனித ஆற்றல் மங்கிடாமல்
மாண்புடனே மனிதன் வாழ்ந்திடவே
விழுப்பம் தரும் ஒழுக்கமே
உயிரினும் மேலாம் என்றே
உணர்த்தப் படும் நாளே
உலக எயிட்ஸ் தினமே
டிசம்பர் 01
உரிமை அற்ற சுதந்திரம்
உயிர்ப்பு இல்லா உடம்பே
உலக மக்கள் யாவரும்
உயர்வு பெற்று வாழவே
உரிமை கோரும் எழுச்சியே
உலகமனித உரிமைகள் தினமே
டிசம்பர் 10
நொடிக்கு நூறாயிரம் பேரை
கொன்று குவிக்கும் வெடிமருந்தே
நோபல் பரிசுக்கு வித்தாமே
உணர்ந்து கண்ட உன்னதங்களை
உலக மாந்தர் பயனுறவே
உலகுக்களிக்கும் உத்தமர்கள்
ஓங்கு புகழாரம் சூட்டப்பெற்றே
நோபல் பரிசு பெறும் தினமே
டிசம்பர் 10
இறைவனே தந்தையும்தாயுமானவர்
சக மனிதர் சகோதரர் என்றே
சாற்றிடவே நன்றே பூவுலகில்
புனிதர் ஏசு பிறந்து வந்த தினமே
கிறித்துமசு டிசம்பர் 25
சிந்தையில் வரும் ஒவ்வொரு நாளும்
சிறப்பு பெற்ற உத்தமர்கள் நினைவில்
வாழும் நாளே! அவற்றுள் மனிதம் வாழ
விளங்கிடும் நாளே அரிய நித்திலமே!