அரசியல் லாபமும் அப்பாவி மனிதனும்
மதம் பிடித்த யானையை
யாருக்கு பிடிக்கும்....
@@@@@@@@@@@@@@@
மதம் என்ற சாக்கு
தமிழகத்தில் இல்லை ...
@@@@@@@@@@@@@@@@
மதம்
மூலதனம் ...
வடக்கே தான் ...
தெற்கில்
உங்கள் மூலதனத்தை ...
கொண்டு வந்தால் ...
தூக்கி விசப்படுவீர் ...
தமிழனின் ஒற்றுமை
எனும் மின்சாரத்தால் ....
@@@@@@@@@@@@@@@@@@
ஒருவரின் பேச்சுரிமையை கூட
விற்று வியாபாரம்
செய்யும் ...
வியாபாரிகளே ...
உங்களின்
வியாபாரத்தை
வாடிக்கையாளருக்கு
அதாவது உங்கள்
விசுவாசிகளுக்கு விற்று தள்ளுங்கள் ....
ஏன் உங்களின்
பல ஆண்டு சரித்திர
சாதனை புரட்சியை
சொல்லி வியாபாரம்
செய்ய வேண்டியது தானே !
உங்களின் லாபத்திற்கு
வாடிக்கையாளர்களை ஆண்டி ஆக்காதே ....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@