மழை

இறைவா காப்பாற்று

ஏன் இந்த சீற்றம்
யாரிடம் இந்த கோபம்
எதனால் இந்த செயல்
காரணம் கூறு

உலகைக் காப்பது உன் கடமை
உயிரிணங்களை காப்பதும் நின் கடமை
அப்படி இருந்தும் ஏன் இந்த நிலை
சற்றே எமக்கு விளக்குவாயாக

எல்லாம் இருந்தும் இன்று எதுவுமில்லை
எங்கள் உயிராவது நிலைக்குமா தெரியவில்லை
சிறு மழலை முதல் முதியோர் வரை
அனைவரையும் உலுக்கி எடுக்குது இந்த மழை

மழை வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம்
நீ காது கொடுத்து கேட்கவில்லை
இன்று வேண்டாம் என்று கதறுகிறோம்
நீ அதற்கும் செவி சாய்க்கவில்லை

இயற்கையின் சீற்றம்
கடவுளின் கோபம்
எதுவாய் இருந்தாலும்
சற்று சாந்தம் கொள்

நகரமே மிதக்குது தண்ணீரிலே
எங்கள் கண்களோ குளமாகுது கண்ணீரிலே

இன்னும் தொடருமாம் இந்த பேய் மழை
நடுங்கிக் கொண்டிருக்கிறோம் மனதளவிலே
யாரிடம் சென்று முறை இடுவோம்
இந்த அவல நிலையை நாங்களும் தான்

உன்னால் முடியாதது எதுவுமில்லை
நீ நினைத்தால் எதுவும் நடக்கும் ஒரு நொடியில்
அடுத்த பொழுது நல்லதாக அமைய
இந்த மழையை காணாமல் செய்துவிடு

உன்னிடம் சண்டை போடவில்லை
மனக் குமுறலை தான் சொல்லுகிறோம்
இன்றளவும் நீ இருக்கிறாய் என்று நம்புகிறோம்
அபயக் கரம் நீட்டுவாய் எமைக் காப்பதற்கு

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி – 02.12.2015 நேரம் - இரவு 11.05 மணி

எழுதியவர் : (2-Dec-15, 11:25 pm)
Tanglish : mazhai
பார்வை : 86

மேலே