கிட்டா அருந்தேன்

கிட்டா அருந்"தேன்"

மன்மதன் எய்திட்டான் மலர்க்கணை
மங்கைநீ எய்திட்டாய் விழிக்கணை
என்மனம் நினைந்தது உனைதனை
இச்சகத்தில் உளவோ உன்இணை!
காரிகையே கொண்டாய் ஊடல்-நான்
கனவில் கண்டேன் கூடல்!

வாயில்லா பூச்சியாய் இருந்”தேன்”
வஞ்சிநீ கிட்டா அருந்”தேன்”
பாய்தனில் நித்திரை மறந்”தேன்”
பனிமொழி பகன்றதில் திளைத்”தேன்”
காரிகையே கொண்டாய் ஊடல்-நான்
கனவில் கண்டேன் கூடல்!

கோவை இதழ்களோ கெஞ்சும்
கருவண்டு விழிகளோ கொஞ்சும்
பாவையுன் சிரிப்போ முல்லை
பாரினில் அதுபோல் இல்லை!
காரிகையே கொண்டாய் ஊடல்-நான்
கனவில் கண்டேன் கூடல்!

வஞ்சியுன் இடையோ கைப்பிடி!
வாயிதழில் ஊறுதே! தேன்-படி
நெஞ்சினில் ஏற்றினாய் தீக்கனல்
நேரிழையேநீ இன்ப புதுப்புனல்
காரிகையே கொண்டாய் ஊடல்-நான்
கனவில் கண்டேன் கூடல்!



---கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (4-Dec-15, 5:43 pm)
சேர்த்தது : கேஅசோகன்
பார்வை : 84

மேலே