சோகத்துடன் ஒரு ஜோக்

■ ஹலோ! ஐசிஐசிஐ பேங்கா?

● ஆமாங்க!

■ நான் சின்ராசு பேசறேங்க!

● சொல்லுங்க!

■ நான் வண்டிக்கு இந்த மாசம் டியூ கட்டலைங்க!

● பரவால்லைங்க!
மழை வெள்ளம் வந்ததால பைன் எல்லாம் போட மாட்டோம்.
அடுத்த மாசம் சேத்து கட்டலாம்னு எஸ்எம்எஸ் வந்திருக்குமே!

■ வந்ததாலதான் கூப்பிட்டேன்.
அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?

● வண்டியை வந்து நாங்களே எடுத்துக்குவோம்!

■ அதை இப்போவே வந்து செய்ய முடியுமுங்களா?
ஏன்னா வண்டி பத்தடி தண்ணிக்குள்ள நிக்குது!

🔴 டொக்!
-
-

எழுதியவர் : செல்வமணி - குமாரராஜா கருப் (12-Dec-15, 12:22 pm)
பார்வை : 197

மேலே