அங்ககீனமாக்கி விட்டாங்க

அப்பனும் ஆத்தாளும்
கொஞ்சிக் கொஞ்சி என்னை
வளர்த்தாலும் - கூடவே
நல்ல குணங்கள் இது இதுன்னு
போதனையும் ஊட்டினாங்க.
பள்ளி படிப்பிலையும்,
பக்குவமா வாத்தியாருக
வகை வகையா சொல்லிக் குடுத்தாங்க.
குறிப்பா, தமிழ் வாத்தியார்.
அறம், அன்பு, காதல், வீரம்னு,
வாழ்கைய வாழுறது எப்படீன்னு
புட்டு புட்டு புத்தியில
புகுட்டுனாருங்க..
எனகென்ன புடிக்கும்,
புடிக்காதுன்னு புரிஞ்சபடி,
கல்லூரியில நுழைசெனுங்க..
நல்ல நண்பருகளும்,
நயமான பேராசிரியர்களும்,
பேதமில்லாம அறிவ
பெருக்கிவிட்டாங்க...
சுயமா சிந்திக்கிவும்,
சொந்தக் காலில நிக்கவும்,
பழக்கப்டேனுங்க...
நேரம் கெடைக்கும்போது,
இலக்கியங்களும், நல்ல கதைகளும்,
கட்டுரைகளும் படிச்சு படிச்சு
பூரிச்சு கிடந்தேனுங்க...
வசதியும் வந்தது,
தொழில் நுட்பமும் வளர்ந்தது,
விரல் நுனியில வித்தியாச,
வித்தியாச உலகத்தை உற்றுப்
பார்க்க முடிஞ்சுதுங்க...
மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி.
ஒரு நாளிதழ் படிப்பது போய்,
பல பல நாளிதழ்களை மேய்ந்து
விழுங்கினேங்க...
சிந்தனை திறன்
சூடுபிடித்து,
சுடர் விட்டு எரிந்ததுங்க...
வித விதமான
விவாதமேடைகள்,
தொலைகாட்சியில் காட்டி,
என்னை மிரள வைத்ததுங்க...
இப்படியாக 15 வருடங்கள்,
நானும் ஊடகமும் ஓட்டிப்
பிறந்த இரட்டையராய்
புரண்டு கிடந்தோமுங்க....
இந்த ஊடக நண்பனோ,
இயற்கைதான் கடவுள்
என்று எண்ணி இருந்த எனக்கு
சத்குருகளையும், ஸ்ரீ ஸ்ரீ களையும்,
மடாதிபதிகளையும் அறிமுகப் படுத்தினாங்க...
ஆரவமுண்டாகி,
ஆசிரமம் சென்று பக்தரான பின்,
கேமரா காட்சி காட்டி,
இவன் காமுகன் என்று
அவனை வெறுக்க வைத்தானுங்க ...
பாலியல் பலாத்காரம் பற்றி,
பக்கம் பக்கமாய் எழுதி
மனதில் வலியை பதியவிட்டு,
ஓரிரு வாரத்துக்குள்ளே
என்னை மறந்து விட சொல்லுறாங்க...
அரசியல் வாதியை அயோக்கியன் என்றும்,
மறுநாளே யோக்கிய புருஷனென்று
புகழுறாங்க...
கிரிக்கெட் வீரர்களை குலதெய்வமாகி,
போர் வீரர்களை பொம்மை பொருளாய்
புரளிவிடுறாங்க...
சினிமாவை சின்னாபின்னமாக்கி,
சினிமா காரனை சிந்தனைவாதியாக,
சித்தரிக்கிறாங்க...
இப்படி எத்தனை எத்தனையோ,
முரண்களுங்க...
நான் ஒரு சராசரி இளைஞன்,
நான் ஒரு சாது,
பெற்றோர் சொன்னதும்,
வாத்தியார் வகுத்துக் கொடுத்ததும்,
தமிழ் கதைகள் போதித்ததும்
வேதமாய் மனதில் ,கொண்டு,
முடிந்தவரை அதையே பின்பற்றி
நடந்தவனுங்க...
இப்போது,
நான் பார்க்கும் எதுவிலும்,
நான் கேட்க்கும் எதுவிலும்,
நான் சொல்லும் எதுவிலும்,
நான் செய்யும் எதுவிலும்,
நான் உணரும் எதுவிலும்,
என் அவிப்பிராயம் கொஞ்சம் கூட
தட்டுப்படவே இல்லையுங்க ..!
யாரோ என்னை,
இப்படி பார்,
இப்படி சொல்,
இப்படி கேள்,
இப்படி செய்,
இப்படி சிந்தி,
என்று வழிநடத்துவது போல்,
உணருறேங்க...
எது நியாயம்,
எது அநியாயம்,
புரியவில்லைங்க...
எது சரி,
எது தவறு
விளங்கைங்க....
யோசித்து யோசித்து,
கடைசியல புரிஞ்சமாதிரி
தெரியுதுங்க...
இந்த பலாப் போன,
ஊடக விரோதி தான் என்னை
ஓயாம தொரத்துறாங்க...
போதாகொறைக்கு
வலைதளமும்,
சமூக ஊடகமும்
கைகோர்த்து குரல்வளைய
நெறித்து நெறித்து,
சிந்தனை திறனை சீர்குலைத்து - என்னை
அங்ககீனமாக்கி விட்டாங்க.....!!
ஆகையாள....
அன்பான,
அடுத்த தலைமுறைகளே,
சூதானமா சுய புத்திய
பாதுகாத்துங்க......!