மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

மழையின் சீற்றம் தணிந்த பின்னரும் ,
தேங்கிய தண்ணீர் வடிந்த போதிலும்
மின்சாரம் இன்னும் வரவே யில்லை;
அதனா லென்ன பரவா யில்லை!

தொலைபே சிகளின் தொடர்பே இல்லை!
இது ஒரு பெரிய இடரே இல்லை!
தொலைக்காட். சிகளும் தெரிவது இல்லை!
போனால் போகட்டும் விட்டது தொல்லை!

இரண்டா யிரத்துப் பதினைந்தை விடுத்து,
பற்பல ஆண்டுகள் பின்னே சென்றேன்!
இதுவரை இருந்த இரைச்சல் விலகி ,
இதமாய் ஒலிக்கும் அமைதியைக் கேட்டேன்!

அடைமழைக் கஞ்சி அடங்கிய பறைவைகள்,
கூடுவிட் தெழுந்து . கூவும் குரல்கள் ,
தூறல் மழையின் சாரல் தாளம் ,
பறவைகள் . குரலுக் கியற்கையின் மேளம்!

இலைவிட் டிறங்கும் மழைநீர்த் துளிகள்,
தரைவிழுந் தெழுப்பிடும். "டக்-டக்" ஒலிகள்,
சலசலத் திடும் இலைகளின் சிலும்பல்,
தவளைக் கூட்டத்தின். கவலைப். புலம்பல் ,

எங்கும். நிறைந்தவிவ் வியற்கை ஒலிகள்,
கேட்கையில் மறைந்ததென் மனதின் வலிகள் !
எங்கனம் உரைப்பேன் என்மன நிலையை?
இதுபோல் இதுவரை. நிறைந்தது. இல்லை!

முகில்கள். வானை. மூடிவிட். டதால்,
பகலெது , இரவெது , புரியவே இல்லை!
மின்விளக். குகளும் எரியா ததனால்,
நேரமும் கொஞ்சமும். நகரவே. யில்லை .

பூஜை அறையில் எரியும் திரியில்,
மெழுகு வத்தியின் கடைத்துளி உயிரில்
சற்றே பரவும் ஒளியின் பார்வை;
அதனைத் தாண்டினால் , . இருளின் போர்வை.

சுருங்கும் ஒளி கொஞ்சம் இருக்கும் போதே,
இருக்கும் சோற்றைப். பகிர்ந்து கொண்டோம்.
நெருங்கி அமர்ந்து உறவுடன் உண்டோம்!
வருத்தமொன் றின்றி. சிரித்து. மகிழ்ந்தோம்!

இன்னலும், இடரும். இம்மழை. கொணர்ந்தது ,
எனினும் கண்டோம் . மற்றொரு பக்கம்,
முன்னொரு கவிஞன் மொழிந்தது போல ,
மாமழை போற்றுதும்! மாமழை. போற்றுதும்!

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (15-Dec-15, 11:47 pm)
பார்வை : 1294

மேலே