மன்னிப்பு

மன்னிப்பு – சிறுகதை
இராசுவிடம் நச்சரித்தாள் அவன் மனைவி ”நமக்குன்னு ஒரு இடம் இருந்தா நல்லதுதானே என்று அவன் கட்டிட வேலையில் பெரியாள் வேலை செய்பவன்..அன்றாட கூலி..மழைக்காலத்தில் அதுவும் வராது.
கூலி வாங்கினால் சிலர் டாஸமாக்குக்கு போவார்கள். இராசுவிடம் அது இலலை. வீட்டிற்கு நேராக வந்து கூலியை மனைவியிடம் கொடுத்து விடுவான்.
அவள் மனைவி சிறுக சிறுக சேர்க்க ஆரம்பித்தாள். அவள் கழுத்தில் தாய் வீட்டில் போட் நகை கொஞ்சம் இருந்தது.
எல்லாமாக சேர்ந்து…முட்டி, மோதி ஒரு காலிமனையை வாங்கி விட்டார்கள். அந்த இடத்தில் சின்னதாய் குடிசைப் போட்டு வாழத் தொடங்கினார்கள்.
குடிசை போட்ட இடம் தவிர மீதி இடத்தில் சில செடிவகைகளும், மரங்களும் நட்டார்கள். அவைகளை நட்ட புதிதில் இராசுதான் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தான். நன்றாக தழைத்து வளர்ந்தன செடிவகைகளும், மரங்களும். அதில் ஒரு மரம்,
மாமரம் நன்றாக வளர்ந்து வர…வர..இராசுவின் குடும்பத்தில் மாற்றம் ஏற்பட்டது.
தொழிலில் பெரியாளாக இருந்த அவன் மேஸ்திரி ஆனான். கொஞ்ச நாளில் பில்டிங் காண்டிராக்டர் ஆகவே ஆகிவிட்டான்.
அவன் குடிசை உருமாறி பங்களா…அதன் அருகில் ஒரு புத்தம்புதிய கார் ஒன்றும் நின்று கொண்டிருந்தது.
”என்னங்க இந்த மாமரம் நல்லா வளந்திருக்கு…பூதான் எடுக்கல என்னன்னு பார்க்க கூடாதா? என்ற மனைவியின் சொல்லுக்கு,
வேளாண் அதிகாரியைக் கூட்டி வந்து காண்பித்தான்.
சுற்றி…சுற்றி பார்த்தார மரத்தை…”உதட்டைப் பிதுக்கினார்” நூற்றுல ஒரு மரம் இப்படி வந்திடும், இது ஆண்மரங்க காய் காய்க்காது, வேஸ்டுங்க” வெட்டிடலாம என்று சொல்லி விட்டு பொய் விட்டார்.
அந்த மாமரத்தை வெட்ட ஆளைத் தேடினான்.
இதற்கிடையில் பில்டிங்க காண்டிராக்ட எடுத்த பில்டிங் ஓனருக்கு ஊர்ல ஏதோ பிரச்சனை என வேலையை நிறுத்த சொல்லிவிட்டார். வேலை எடுத்த இடங்களில் வேறு…வேறு பிரச்சனைகளும் தோன்றி குடைச்சல் கொடுத்தன.
வேலைதான் சரிவர இல்லையே நம்மவீட்டு செடி..கொடி..மரங்களையாவது பார்க்கலாம் என எண்ணி சுற்றி பார்த்தான்.
”ஒவ்வொரு செடியையும், மரத்தையும் பார்த்து வரும்போது மாமரத்தின் அருகே போனபோது…அவன் மனசு தி்க்கென்று ஆனது. அவனுக்கு புரியவில்லை..
”ஏதோ ஒரு உணர்வு அவனுக்குள் புகுந்து கொண்டு நிம்மதியை இழக்கச் செய்தன.
அன்று இரவு தூங்கும்போது நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் ”உன் பொண்டாட்டி கூட இன்னமும்ம புள்ளைப் பெத்துக்காமதான் இருக்கா? என்ன செய்யுறதா உத்தேசம்” என யாரோ கேட்பது மாதிரி ஒலித்தது அவனின் காதிற்குள்…
மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான் மா- மரத்திடம்.
நன்றி –தமிழ்தொழில் உலகம். கே. அசோகன்.

எழுதியவர் : கே. அசோகன் (18-Dec-15, 8:05 pm)
Tanglish : mannippu
பார்வை : 990

மேலே