இதயத்தின் மரணம்

வார்த்தைகளின் வசீகரத்திலும்
அங்கங்களின் வர்ணனைகளிலும்
அன்பு அளவிடப்படுகிறது

வாட்ஸ்அப் செய்திகளிலும்
முகநூல் பதிவுகளிலும்
எண்ணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன

அலைப்பேசி புகைப்படங்களிலும்
பரிமாறிய பரிசுப்பொருட்களிலும்
உள்ளங்கள் உணரப்படுகின்றன

வேகமாக கடந்து செல்லும்
விஞ்ஞான உலகில்
அளவற்ற அன்பை சுமந்துகொண்டு
வெளிபடுத்த தெரியாத இதயமொன்று
அருகிலிருந்து கொண்டே
மரணித்துக் கொண்டிருக்கிறது

எழுதியவர் : சூரியகாந்தி (23-Dec-15, 12:23 am)
பார்வை : 113

மேலே