என்னை கொன்றுவிடுங்கள்- சந்தோஷ்
என்னை கொன்றுவிடுங்கள்.
உங்கள் எரிமலைச் சொற்களை
என் மீது விட்டெறிந்து கொளுத்துங்கள்.
உங்கள் காழ்புணர்ச்சி கூரிய முனையில்
என் நெஞ்சத்தை துண்டு துண்டாய் வெட்டுங்கள்.
உங்கள் பொறாமைச் சிலுவையில்
எனை அம்மணமாய் அறைந்துவிடுங்கள்.
எனை வன்கொடுமை செய்வதென்பது
உங்கள் விருப்பம் என்றாவது..
எனை தவறாய் புரிந்தவர்களே
எனை பிழையாய் பார்ப்பவர்களே
உங்கள் கொலைவெறித்தாக்குதல் யாவும்
எனை
மரணிக்கச்செய்யும் அல்லது
ஜீவித்திருக்க வைக்கும்
என் மீதான உங்கள் கோபம், துரோகம், சந்தேகம்
இவையாவுமெனக்கு
புன்சிரிப்பைத்தான் தருகிறது,
சந்தோஷ ரணமாகிவிடுகிறது.
எப்போதும் போல உங்களிடம்
எனை கையளித்துவிடுகிறேன்.
உங்கள்
பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும்,
புறக்கணிப்பும்.. வெறுப்புணர்வும்தானே
எப்போதுமெனக்கு மனவுறுதியைத் தந்தது.
உங்கள் வெளிப்பாடுகளெல்லாம்
எனதிருப்பின் மீதான நேசம், பாசம், அன்பு
என்பதைத் தவிர வேறென்னவாக இருக்கும் ?
-இரா.சந்தோஷ் குமார்.