மௌனம் வலிமிக்கது
![](https://eluthu.com/images/loading.gif)
தோழனாக நினைத்து
தோளில் சாய்ந்தேன்
எழும்போது
காதலில் விழுந்தேன்....
------------
பொறமை கொண்டேன்
உன் கைப்பேசியை கண்டு
நான் பேசும் போது
உன் தோளில் சாய்கிறதே அது ...
-------------
பூக்களின் வாசத்தை நுகர்ந்தேன்
எதுவும் மணக்கவில்லை
உன் வியர்வையின் வாசத்தை விட
--------------
யார் பேசியும் வராத கோபம்
நீ பேசாத மௌனத்தால் வந்தது
அன்று தான் உணர்ந்தேன்
வார்த்தையை விட
மௌனம் வலிமிக்கது என்று
-------------