காதல் கோலம்

அன்பு என்ற நிலையை
அடைய விரும்பிய நீ
அவள் வந்ததும்
அனலாய் பறந்தது ஏன்?
காலம் வரும் என காத்திருந்த நீ
காதல் வந்ததும்
காற்றாய் பறந்தது ஏன்?
நினைத்தது கிடைக்கும் என் நின்றிருந்த நீ
நிலவானவள் வந்ததும் நில்லாமல் சென்றது ஏன்?
பட்டம் பெற வேண்டி வந்த நீ
பருவ மங்கை வந்ததும் பறந்து சென்றது ஏன்?
இது தான்
காதல் எனும் நோய் செய்த கோலமோ . . .

எழுதியவர் : மாரி சிவா (6-Jan-16, 2:53 pm)
Tanglish : kaadhal kolam
பார்வை : 126

மேலே