வெற்றிடமாய்-----------------------------------------நிஷா
செங்கல் அடுக்கி....
செவ செவ னு சுவரு ஒன்னு
சிந்தனையில் சிவப்பு பூனை
சிங்காரமாய் நிற்குதம்மா மதில்மேல....
எங்க ஊரு வயசு பொண்ணு
வாலிபத்தின் மயக்கத்திலே
தப்பு சரி தெரியாம...
தவிக்கிறாமா பூனை போல....
அம்மா இன்று தூரம் ஆயிட்டா.....
அப்பா இப்போ தள்ளிப் போயிட்டார்...
நேத்து வந்த காதலனோ...
உயிரை விட பெரிசா போனான்...
ஏனிந்த மயக்கமுனு
ஏதுமறியா குழந்தை போல..
ஏங்குதிந்த பாவி மனசு
என்ன செய்ய தெரியலயே.....
பாடம் சொல்லும் வாத்தியாரை
பார்த்தா கோபம் வருகுதம்மா
பளிங்கு போல உள்ளம் இன்று
பாறை போல இருகுதம்மா....
வெள்ளை மனம் இன்று
வேதனையில் தவிக்குதம்மா...
வீரநடை போட்ட நாட்கள்
வெற்றிடமாய் ஆனதம்மா......
நிஷா