ஏறு தழுவுதல் - துகிருஷ்ணமூர்த்தி
இது காளையுடன் சண்டை அன்று.
தினவெடுக்கும் தோளோடு தோள்கண்ட காதலாம்.
இது காளையை அடக்குதல் அன்று.
எம்மூர்க்கத்திற்கு முன்னோர் கண்ட வடிகாலாம்.
இது மூவாயிரமாண்டாய் நடந்தேறும்
பண்டைதமிழன் எம்முப்பாட்டானின் ஐபிஎல்-லாம்.
இது காளைக்கிழைக்கப்படும் ஊறன்று.
காளையை கவர்ந்து மலர்மங்கையை கவர
எம்முந்தையர் மொழிந்த பந்தயபோட்டியாம்.
மத,இனவுரிமை பேசி மொழி மறந்தோம்-இன்று
விலங்குரிமை பேசி, வழி மறக்கலாமோ?
எம்தாத்தன் தந்த சொத்து இது,
எம்தமிழ் நிலத்தின் வீரவித்து இது.
கொம்பு சுழற்றும் காளை, தன் மூர்க்கம் காட்டும் நாளை.
வரிந்து கட்டு வீரத்தமிழா!
தொடரும் மஞ்சுவிரட்டு திருவிழா!
இடரும் கார்பொரட்டு கயமை,
மீட்டெடு தமிழர்தம் மேன்மை.
மாட்டொடு விளையாடு, கொள்பெருமை.
மண்ணில் காளையின் கால் பதியும் அன்று,
விண்ணில் தெறிக்கட்டும் நம்தமிழர்தம் மாண்பு.