காந்தி சிரித்தார்
பள்ளிக்கூடம்
ஒற்றை நாள் போனதில்லை
தடையாய் வறுமை
வேளை சோற்றுக்காய்
வேலைக்கு போனேன்
கற்க வேண்டிய வயதில்
கற்கள் சுமந்தேன் !
தின கூலியாய் நூறு ரூபாய்
என்னுடைய
ரூபாய் நோட்டிலும்
மற்றோர் புத்தக நோட்டிலும்
காந்தி சிரித்தார்
கண்களில் இருந்து ஒற்றை துளி
மெல்ல விழுந்தது
கூலி கிடைத்த ஆனந்தமா ?
கல்வி கிடைக்கா ஆதங்கமா ???
இலவசங்கள் வண்ண தொலைகாட்சியா??
வாழ்வை வளமாக்கும்
கல்வி கொடுங்கள்
எங்கள் போன்றோர் புத்தக
நோட்டிலும் காந்தி சிரிக்கட்டும்