உனக்காக நீ உழைத்தால்

மாலை 6 மணி மனதில் கலக்கத்தோடு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்தான் தமிழ் அவனுக்குள் ஏதோ ஒன்று ஆனால் அதை யாரிடமும் சொல்லமுடியவில்லை சொன்னால் ஒரு நன்மையையும் இல்லை என்பதாலோ அல்லது அதை சொல்ல சரியானவர்கள் இல்லை என்பதாலோ கலக்கத்தோடு வீட்டிக்குள் நுழையும் போதே...
வந்துட்டியாப்பா என்று அவனின் அம்மா குரல் கேட்க்க...
அவன் அம்மா கொஞ்சம் COFFEE கிடைக்குமா என்றான் ...
இருடா எடுத்துட்டுவர்றேன் என்று சொல்லி வேகமாக அவன் அம்மா சமையல் அறையில் நுழைந்தால்.
(அவனும் கை கால் அலம்பிவிட்டு அறையில் வந்து அமர்ந்தான் )
அதே சமயம்
அவன் அம்மா COFFE யோடு அவனை நோக்கி வந்து இந்தாட COFFEE என்றால் .என்னடா ஒரே யோசனையா இருக்க....
இல்லம்மா என்னோட படிச்சன்வன இன்னைக்கு பார்த்தேன் car வாங்கிட்டான் என்னால நம்பவே முடியல என்ன விட சும்மராதான் படிப்பான் அவன் எப்படி கார் வாங்கினானு....
அட இதெல்லாம் ஒரு யோசனையா நல்ல வேலை கிடைச்சிருக்கும் நல்ல சம்பாதிச்சி வாங்கிருப்பான் அதில்லமா...
அது இல்லம்மா அவன் வேலைக்கு எல்லாம் போகவில்லை ஒரு சின்ன பால் கடை ஆரம்பித்து இப்போ நல்லா இருக்கான்....
அப்போதுதான் நான் யோசித்தேன் நான் யாரோ நல்லா சம்பாதிக்க கஷ்ட்டப்பட்டு வேலை செய்கிறேன் ஆனால் அவன் அவனுக்காக கஷ்டப்பட்டு இப்போ நல்லா இருக்கான்...
அது என்னமோ உண்மைதான் உங்க அப்பாக்கு ஒரு நல்ல கடை எடுத்து நடத்துற வியாபாரம் வந்துது ஆனா அவர் தான் வேணாம்னு வேலைக்கு போய் நல்ல position க்கு போகணும்னு விரும்பினார் இப்போ பாரு உங்கப்பா வேணாம்னு சொன்ன கடை வேறொருத்தர் வாங்கி இப்போ அவருக்கே பல கடைங்க வீடுங்கன்னு ஆயிடுச்சி....
ஆமாம்மா எங்க company முதலாளி அமெரிக்கால இருக்கார் ஆனா அவர் சம்பாதிக்கிறார் நான் யாருன்னு கூட அவருக்கு தெரியாது ஆனா அவரு சம்பாதிக்க அவருக்காக நான் வேலை செய்றேன்

உண்மை மக்களே ...

உனக்காக நீ உழைத்தால் உன் உழைப்பு மொத்தமும் உங்களுக்கு கிடைக்கும் ...
மற்றவருக்காக நீ உழைத்தால் உனக்கு ஊதியம் மட்டுமே கிடைக்கும் ...
உழைப்பிற்கான ஊதியத்தை எந்த நிறுவனமும் இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை ....

எங்கோ இருக்கும் முதலாளிக்கு நாம் உழைக்கிறோம்...
அதனால் நம் வீட்டு வேலையை செய்ய கூட செய்யமுடியாமல் வலுவிழந்து போகிறோம் ...
ஒவ்வொருவரும் முதலாளி நீ உனக்காக உழைத்தால்

எழுதியவர் : சாமுவேல் (17-Jan-16, 12:08 pm)
பார்வை : 356

மேலே