நீ தந்த பரிசு
நான் டேஜா வூ (தினமும் என்னிடம் நீ பேசுவது போல் நினைக்கிறேன் )
நீ ஜமாய் வூ (பார்த்து பழகிய என்னை யார் என்று கேட்கிறாய்)
உன் மூச்சு காற்று எனக்கு
நைட்ரஸ் ஆக்சைடு...
மண் புழுவை போல் எனை
மாற்றி விட்டாய்
இதயத்தை திருடி விட்டு...
(மண் புழுவுக்கு இதயம் கிடையாது)
நூலில்லா பட்டம்...
சுடரில்லா தீபம்...
இடமில்லா வெள்ளம்...
நிழலில்லா மரம்...
ஓட்டமில்லா இருதயம்...
அலையில்லா கடல்...
அசைவில்லா உடல்...
சாவியில்லா பூட்டு...
காசில்லா பிச்சைதட்டு...
WiFi இல்லா கைபேசி...
நான்...
உன்னால்...
(நீ தந்த பரிசு...)