தமிழ் முழக்கம்

தமிழ்த் தாய் வாழ்த்து

🐠🐠தமிழ் முழக்கம் 🐠🐠

"அறம் செய்" அறிவித்த அருந்தமிழே - நீ வாழி..!

ஆண் பெண் நிகரிலக்கணம் அருளினாய் - அழகு தமிழே - நீ வாழி..!

இயல் இசை நாடகம் - ஈன்ற இன்னிசைத் தமிழே - நீ வாழி..!

ஈகை ஒப்புரவு விருந்து இனிதென்றாய் இன்தமிழே - நீ வாழி..!

உயிரே பிரியினும் உன்னை மறவேன்!என்
உவகைத் தமிழே - நீ வாழி..!

ஊன் அறுத்து உயிர் அறுத்து கேட்பினும் உன்னை விட்டு பிரியேன் என் உயிர்த் தமிழே - நீ வாழி..!

"என்றுமுள தென்றமிழ்" என கம்பம் பாடிய கவி தமிழே - நீ வாழி..!

ஏழ் பிறப்பும் இன்பம் தரும் எனையாண்ட என் இன்பத்தமிழே - நீ வாழி..!

ஐந்திணை வகுத்து இவ்வுலகில் ஐயாய் திகழும் ஐந்தமிழே - நீ வாழி..!

ஒலித்தால் இனிக்கும், ஒளி வனப்பால் உள்ளம் கவர்ந்திழுக்கும் முத்தமிழே - நீ வாழி..!

ஓங்கி உயர்ந்தது ஒழுக்கம் தானென்ற என் ஒண்டமிழே - நீ வாழி..!

ஔடதமாய் திகழும் என் அன்னைத்தமிழே - நீ வாழி..!

ஆசையில் அடியேன் வாழ்த்துகின்றேன்..!
நின் அருட்பாதம் தொழுது கவி தீபம் ஏற்றுகின்றேன்..!

வாழிய வாழியவே...!

செந்தமிழே ! நீ வாழிய வாழியவே..!



(தமிழ் காதலன் என் நண்பர் எழுதிய கவிதை)

எழுதியவர் : தமிழ்க் காதலன் (21-Jan-16, 9:04 am)
சேர்த்தது : தமிழ்நேயன்
Tanglish : thamizh muzhakkam
பார்வை : 626

மேலே