இன்ப உலகம்

எனக்கு முன்னே
நீ பிறந்த கணக்கில்
என்ன தந்திரமோ
உன் வரவில் என் பிறப்பும்
கணக்கில் உண்டு
பெற்றவர்கள் போட்டு விட்ட
தப்புக் கணக்கா இல்லை இல்லை
இதுதான் சரியான கணக்கு
உன் அத்தை மகளாக
ஒரு வேரில் இரு செடிகள்
இரு செடிகள் பூத்தது இங்கே
நறுமலர்கள் நாமாக
நம்ப முடியவில்லை
நானும் நீயுமா /
இது உலகில் ஒப்பற்ற வாழ்கை
இணைந்து விட்ட நம்மாலே
பலம் கொண்ட உறவுகளாய்
காண்கின்றோம் சொந்தங்களை
இறைவன் வகுத்த இன்ப உலகம்
இதுதான் இதுதான் இதுதான்

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Jan-16, 12:42 pm)
Tanglish : inba ulakam
பார்வை : 107

மேலே