ஈழம்
முழுஅடைப்பில் ..
மூடிக்கிடக்கும்
கடைவீதியாய்!
ஏனடி ?-உன் முகம்
வெறிச்சோடி கிடக்கிறது !
ஈழத்தில் ...எம்மக்கள்
இறந்த செய்திகேட்டா
தொப்புள் கொடி உறவென்று
ஓரத்தில் இருந்து கொண்டு
ஒப்பாரி வைக்கின்றாய் !
குண்டு பொட்டபொதெல்லாம்.....
குரட்டைவிட்டு தூங்கிவிட்டு !
இன்று புலம்பி ...-நீ
என்ன செய்ய போகிறாய் !
சிங்களவன் சிநேகிதத்தால்
சிந்தை இழந்து கிடக்கிறாள் -என்
இந்திய தாய் !
தமிழனின் உணர்வுகளுக்கா ?
தலை சாய்க்க போகிறாள் !
தாய் என்ற தகுதியை ..-இவள்
தானே இழந்துவிட்டு
தலை குனியும் காலம்
வெகு தொலைவில் இல்லை
இலங்கை நமக்கு .......
நட்பு நாடு என்று சொல்லி
மாபெரும் வரலாற்று ..
தப்பு நடந்துகொண்டிருக்கிறது !
விடுதலை புலிகளின் .......
விடுதலை போராட்டம்
வீண் போய்விட்டது ...என
கூறிக்கொண்டு .....
இந்திய ஒருமைப்பாட்டில்
இடைவெளியை ஏற்படுத்துகிறாள்
இந்திய தாய் ?