கஸல்

ஒரு நதியைப்போல ஓடிவந்தேன் கரைகளை மறைத்துவிட்டாயே .
கடலைப்போல் கொந்தளிக்கிறேன் இனி அலைகளை என்ன செய்வாயோ?.

அரச செலவில் அடக்கம் செய்யப்படுகின்றன் அனாதைப் பிணங்கள்
மயானத்தின் வெளியே புதைக்கப்படாமல் இருக்கின்றான் சம்பிரதாயங்கள்.

கடனை அடைக்க முடியாமல் குடும்பஸ்தன் விட்டுவிட்டான் உயிரையே
வறுமையை முடித்துக் கொள்ளாமல் குடும்பம் நடக்குது கயிறிலே

மனசாட்சியை கொல்வதொன்றும் விபரீதமாகத் தோன்றவில்லையே
தலைவனாக்கத் தெரிந்த மக்களுக்கு இன்னும் விபரம் வரவில்லையே.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Jan-16, 4:07 pm)
பார்வை : 109

மேலே