===வீணையொலி நீயெனக்கு====

24-01-2016
===வீணையொலி நீயெனக்கு!!====

கருப்பு வெள்ளைச் சிறையினிலே
கட்டிப் போட்டிச் சென்றவளே!
உருவில் அழகிய ,உனைத் தவிர
ஒன்றிலும் நிறத்தைக் காண்கிலனே!

கண்களால் அருந்தினேன்
கன்னியுன் அழகினை!
பெண்களின் முன்பு,நான்
பித்தனாய்த் திரிகிறேன்!

மல்லிகையைப் பூக்கவைத்து
மறைந்து விட்டாய்!
பல்லியென நான்பாடிப்
பரிதவிப்பேன்!

ஆப்பிளாய் நீயிருப்பாய்
அடிவாங்கும் என்கண்கள்!
பூப்பிலே மலரழகு
பிறந்ததுமே நீயழகு!

காணுமொளி நீயெனக்கு
கட்டில்பூச்சி நானுனக்கு!
வீணையொலி நீயெனக்கு
வேட்டுச்சத்தம் நானுனக்கு!
========

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (24-Jan-16, 10:35 am)
பார்வை : 165

மேலே