சாதி என்னும் பேய்

மந்திர அந்தியொன்றில்
நிழற்குடைக் காத்திருப்பில் நான்..
காத்திருக்கும் நிமிடங்களின் கணம்
ஆண்களுக்கே தெரியும் அதிகம்
கொலுசு மறந்தாலும்
நானறிவேன் உன் வரவை
கரம் மாற்றி நீ பிடித்து
காலக் கண்ணாடியின் ரசமழிந்த பின்னும்
இன்றாவது இவ்வழி வருவாய் என்று
தரையில் மீனிறக்கும் நிலையில் நானிருக்க
இன்னும் எத்தனை காதலை
வேரறுக்குமோ சாதி என்னும் பேய்!