உயிருக்குள் உயிர் சுமந்தாள்

இரு ஐந்து மாதம் சுமந்தாள் என சொல்லமாட்டேன்
ஏழாயிரம் மணிதுணிகள் தவம் புரித்தாள் என்றே சொல்வேன் !

ஆயிரம் எலும்பு முறியும் வலி சுக பிரசவமாம்
பிள்ளை நீந்த மாறுத்தால்
உயிர் சுமந்த சேய் குடியில் அறுவை சிகிச்சையாம் !

திவலைகள் சொட்ட சொட்ட பாறையும் பல்லாங்குழியாகும்
சிசுவின் சிறு எடை கூடி உருமாறுகையில்
பிஞ்சை சுமந்த பஞ்சு அறையில் எத்தனை காயங்கள் உண்டானதோ !

அம்மா என்றல்லவா வலியில் கதறி இருப்பாய்
உன் தாயை எண்ணி நீ துடித்தாயோ
உயிர் போகும் வலியிலும்
பிள்ளைக்கு மூச்சு தர
உன் மூச்சுடன் சேய் மூச்சையையும் சேர்ந்து சுமந்தாயோ !

பாசப் பிணைப்பினை அறுக்கும் வேளையில் மயக்கம் கொண்டாயோ
இல்லை ஆனந்த கண்ணீரில் என்னை நனைத்தாயோ !

குடல்தைக்கையில் வலி அடைந்தாயோ
இல்லை மனம் குளிர்ந்தாயோ !

உயிர் தந்து உயிர் ஊட்டினாய்
என் கண் துங்க கண் அயராமல் தாலாட்டுப பாடினாய்
என்னில் சிறுகாயம் கண்டால் முள் தைத்த இதயமானாய் !

அன்னையை உன் அன்புக்கு எதை நான் நிகர் என்பேன் !

பெண்மை என்றுமே ஆண்மையைவிட சிறந்தது
என்று சொல்ல தாய்மை போதாத !

அன்பை அறியேன் தாலாட்டு கேட்டிடாத வரையில்
கடவுளை அறியேன் தாய்மையின் பெருமைகளை அறியாத வரையில்
நீ இல்லை என்றால் தியாகத்தை நான் அறியேன் !

எழுதியவர் : கவி தமிழ் Nishanth (28-Jan-16, 11:21 am)
பார்வை : 398

மேலே