விசய் அசய்

ஏண்டா அறிவழகா, உம் பசங்க ரண்டு பேருக்கும் விசய், அசய் –ன்னு எதுக்குடா பேரு வச்ச?
===
அம்மா அவுங்க பேரு விசய் அசய் இல்லம்மா. விஜய், அஜய்.
===
போடா. நீயும் நீ உம் பசங்களுக்கு நீ வச்ச பேரும்.
===
என்னம்மா சொல்லற?
===
ஏண்டா பெத்த தாய் மேலெ உனக்கு அன்பு இருக்கா?
====
அதிலென்னம்மா சந்தேகம். தாய் மேலே அன்பு காட்டாதவன் மனுசனா இருக்கமாட்டான்.
====
அப்ப தாய் மொழிப் பற்று இல்லாதவன்?
=====
என்னம்மா சொல்லற?
====
தாயும் தாய் மொழியும் ஒண்ணுடா. சரி விசய், அசய். இந்தப் பேருங்களுக்கு என்னடா அர்த்தம்?
======
விஜய் –ன்னா ’வெற்றி’ -ன்னு அர்த்தம். அஜய் –ன்னா ’வெற்றி கொள்ள முடியாத’ –ன்னு தான் அர்த்தம்.
====
ஏண்டா விசய், அசய் –ன்னு இந்திப் பேர எம் பேரப் பிள்ளைங்களுக்கு வச்சதவிட வெற்றி. வெற்றிச்செல்வன் –ன்னு வச்சிருக்கலாமே.
====
சரிம்மா. நா சினிமா மோகத்திலெ எம் பசங்களுக்கு அந்தப் பேருங்கள வச்சுட்டேன். நீ சொல்லற மாதிரியே அவுங்க பேர மாத்திடறேன்.
==================================================================================
==================================================================================================================================
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயர்களின் பொருள் அறிய.
=========================================
Vijay विजय : Victory.
Ajay अजय : Unconquerable; Invincible
====================================================================

எழுதியவர் : மலர் (1-Feb-16, 9:50 pm)
பார்வை : 186

மேலே