பண்புள்ள பேரா வாழ்க

அடுப்பெரிக்க விறகு வெட்டி
எடுத்தவளும் திரும்பும் போது
இடுப்புவலி வந்துக் கொல்ல
நடுவழியில் அமர்ந்தாள் பாட்டி !
விளைந்தநிலம் காய்ந்த தைப்போல்
திளைத்தவுளம் சோர்ந்து போச்சு
சளைக்குமட்டும் வேலை செய்து
களைத்தமனம் வாடிப் போச்சு !
தேடிவந்த பேரன் கண்டு
ஓடிவந்து கட்டிக் கொள்ள
நாடிநரம்பும் சிலிர்த்துப் போக
கோடியின்பம் கண்ணில் பூத்தாள் !
மண்ணிலீரம் வற்றி னாலும்
கண்ணேயுன் ஈர நெஞ்சால்
புண்பட்ட இதயம் வென்றாய்
பண்புள்ள பேரா வாழ்க !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

கொக்காகி மகிழ்...
மெய்யன் நடராஜ்
05-Apr-2025

படம்...
இ க ஜெயபாலன்
05-Apr-2025
