High கூ என் ப்ரிய சகி
கோழி கூரையில் கூவினால்
HIGH கூ
குயில் சோலையில் கூவினால்
CUCKOO
தென்றல் வரும் திசை
தெற்கூ
நரம்பில்லாமல் ஆடுவது
நாக்கூ
காவாக்கால் வந்து சேரும்
பெரும் இழுக்கூ
இது வள்ளுவர் சொன்ன
வாக்கூ
அரசியல் வாதிகள் அள்ளி விடுவது
உறுதியில்லா வாக்கூ
அதில் ஏமாந்து ஏமாந்து மக்கள்
அளிப்பதும் வாக்கூ
மதுக் கடைகளுக்கு என்றும் வாழ்வு
வருமானம் அதற்கு சாக்கூ
கேள்வி பதிலில் சரியாக பதில் சொல்லவில்லையானால்
நீ மக் கூ
கேள்வியே சரியாகக் கேட்கவில்லையானால்
நீ சரியான DOUBLE மக் கூ
செந்தேளிடம் இருப்பது ஜாக்கிரதை
கொடுக்கூ கூ கூ கூ ...
உறுமீன் வருமளவும் குளத்தில் காத்திருக்கும்
கொக்கூ
(என்னையும் போடக் கூடாதா அண்ணே ....சரி உனக்கூம் )
தெருவினில் கழுதை கனைத்து ஓடினால்
கனைக்கூ
(ஹி ஹி ஹி .....நன்றி அண்ணே )
எழுத்தில் அரைத்த மாவையே அறைக்கதே
அது செக்கூ
நீள நீளமாய் எழுதாதே போரடிக்கும்
தமிழில் சுருக்கூ எழுது ஹைக்கூ
எழுத்தில் கவிதை சிறக்க
நீ சொடுக்கூ
சோம்பலில் கொட்டாவி வந்தாலும்
நீ சொடுக்கூ
எழுத்து அழகிய தமிழ் சொர்க்கம்
அறிந்து நீயும் எழுதடி
அடியே என் ப்ரிய சகி சக்கூ !
---கவின் சாரலன்