வளர்ச்சி எனும் மோகம்

காவிரி தடுத்து
முல்லை மறித்து
விளைநிலமும் பறித்து
கெயில் என்பாய்
மீத்தேன் என்பாய்
வளர்ச்சி என்பாய்
உண்டு வாழ என்ன என்றால்
பணத்தை நீட்டி இழப்பென்று கொடுப்பாய்...
நீதி இழந்து
அரசும் மதியிழந்து
உழவனின் உயிரழித்து
உலகமயம் என்பாய்
வணிக உலகமென்பாய்
ஒத்திசைந்து வாழு என்பாய்
இயற்கையை அழிக்க மறுப்பேனென்றால்
தேசத்துரோகி பட்டம் கொடுப்பாய்...
ஒற்றுமை இழந்து
விழிப்பு இழந்து
வளர்ச்சி மாயையில் தவழ்ந்தனால்
அணு உலை பதித்தாய்
காற்றாடி நிறுத்தினாய்
மின்சாரம் என்றாய்
மீறி எதிர்ப்பேனென்றால்
வழக்கை பதித்து வாழ்வை அழிப்பாய்...
இன்னும் எதனை அழித்து வாழு என்பாய்
இயற்கையை அழித்து எதில் இன்பம் கொள்வாய்...
-அருண்வேந்தன்