துளி துளியாய்

மனங்களை திருடும் மந்திர மொழி செவிகளில் நான் கேட்கிறேன்,,!
கணங்களை செதுக்கும் காதல் உளி நீ என நான் பார்க்கிறேன்.
இரவல் மொழி கேட்கிறேன் இதயத்தின் காதல் சொல்ல
இருவிழி ஏதோ கேட்க இதயத்தை மீட்க நான் பார்க்கிறேன்...!
தோய்வுகளில் துள்ளலென்ன தோள்களில் துவள்வதென்ன
தூரங்களை நீட்டித்தே நெருக்கங்களை கோர்க்க நான் பார்க்கிறேன்..!
வெண்ணிற இரவொன்றும் விழிகளில் நிலவொன்றும்
விரல்களின் தேன் துளியில் உன் முகம் நான் பார்க்கிறேன்...!
இறகென நெஞ்சம் மிதக்க இலையென நொடியில் உதிர
கனம் கொண்ட நொடிகளில் உயிர் கரைவதை நான் பார்க்கிறேன்...!
சாரலோடு நான் நனைய காற்றோடு நான் கரைய
அந்தியின் வண்ணம் அதை அழகென நான் பார்க்கிறேன்...!
இயல்பாய் ஏதோ சொல்கிறாய் எளிதாய் நீயோ நகர்கிறாய்
தேநீர் தேகம் தீண்ட வெட்கங்களின் பரிமாற்றம் நான் பார்க்கிறேன்...!
மறதியில் மாலை சூட்டி மையலில் மேடை பூட்டி
மடியினை சேர கனவினில் ஒரு நாள் வரமென நான் கேட்கிறேன்...!