சுதந்திர தினவிழா

சுதந்திர தினவிழா

(அது ஒரு அமைதியான அழகிய கிராமம்.இரு மலைத்தொடர்களுக்கிடையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் இயற்கை எழில் கொள்ளும் பசுமை எங்கும் நிறைந்திருக்கும். மனதை மயக்கும் மாலை நேரத் தென்றலால் மரங்களும் செடிகளும் நடனமாடிக் கொண்டிருக்கும்.கூட்டம் கூட்டமாக பறவைகள் அங்குமிங்குமாக இரை தேடிக்கொண்டிருக்கும்.இத்தகைய கிராமத்தில் உள்ள ஒரு சிறுவனை பற்றிய கதைதான் இது.)

அப்பொழுது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

“யம்மா, யம்மா சாப்பாடு ஆச்சாமா?.”
“இதோ ஆச்சிடா!..நீ தட்ட எடுத்து கழுவி வை,நா சாப்பாடு எடுத்துனு வர்றன்.”
“யம்மா..! சீக்கிறமா எனக்கு ஸ்கூலுக்கு வேற டைம் ஆச்சிமா..!”
”இதா..வந்துட்டன்டா..! இன்னிக்கொருநாள் ஸ்கூலுக்கு லேட்டா போனா ஒன்னும் சொல்லமாட்டாங்க”
“யம்மா! எனக்கு ஸ்கூல்ல கபடி போட்டி இருக்குமா.சீக்கிரமா வரச்சொல்லிருக்காங்க.”
“யன்னது..! கபடியா..! இதா பார்றா கபடி ஆட்றன்,இது ஆட்றன்:அது ஆட்றனு கைய காலுகீது வொடச்சிக்கிட்டு வந்த அவ்வளதான்..சொல்லிட்ட!
”சரிமா..!நா ஸ்கூலுக்கு போய்ட்டு வர்றன்”,” யம்மா..நாளைக்கு எனக்கு கொடியேத்துற நாள் வருது,வெள்ள சர்ட்ட தொவச்சி வச்சிடுமா,!”
“சரி சாமி, பாத்து போய்ட்டு வா! “

அன்னிக்கு ஸ்கூல்ல கபடி போட்டி விறுவிறுப்பா நடந்துகிட்டு இருந்திச்சி..எதிர் டீம்ல இருந்து ஒருபையன் எங்கள அவுட் பன்ன வந்தான்.அவன் அந்த பக்கம் மூலையல இருக்கிறவங்கள தொடலாம்னு ஏறிப்போயிருந்தான்.இதா..! நல்ல சந்தர்ப்பம் அவன புடிக்க அப்டினு நினைச்சி நா வேகமா… ஓடிப்போய் புடிச்சன் என்ன தொடர்ந்து நிறைய பேர் வந்து புடிச்சிட்டாங்க.எல்லாரும் அவுட்டு..!அவுட்டுனு கத்த ஆரம்பிச்சிட்டாங்க..!திடீர்னு ஒரு முனுங்கள் சத்தம்..”அம்மா,,!அம்மா..! அப்படினு என்னனு திரும்பி பார்த்தோம்.அவுட்டான அந்த பையன் கையே பாத்துக்கிட்டு அழுதிட்ருந்தான்..


உடனே..! சார் வந்து “என்னடா ஆச்சி..ஏண்டா அழுவுற “அப்படினு கேட்டாரு.”சார்..கை ரொம்ப வலிக்குது சார் ,என்னால கை தூக்க முடியல”னு சொன்னான்.சாரும் கைய பாத்தரு..! கை கோணல இருந்துச்சி.உடனே..அந்த சார் இன்னொரு சார்அ கூப்பிட்டார்” சார் ..இங்க வாங்க..!இந்த பையனுக்கு கை ஒடஞ்சி போச்சினு நினைக்கிறேன்..ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகனும் சீக்கிரம் வாங்க..”னு.எல்லா பசங்களுக்கும் “பகீர்னு..” ஆய்டுச்சி..என்கூட விளையாடின பசங்க எல்லாம்..”இவன்தான் சார் அந்த பையன் கைய ஒடச்சவன் “அப்படினு என்ன கைய காட்டிடாங்க..சார் ஒன்னும் பேசாம..அந்த பையன ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க..


வகுப்புல அமைதியா..! உள்ளுக்குள்ள பயத்தோடு..அம்மாக்கு தெரிஞ்சா அடிப்பின்னிடுவாங்களே..! அப்படினு உட்காந்துட்ருந்தன்.வகுப்புல எல்லா பசங்களும் பொன்னுங்களும்..என்ன ஒரு மாதிரி பாத்துட்டு இருந்தாங்க..திடீர்னு ஒரு பையன் வந்தான்.”மணி..மணி…உன்ன ஒரு சார் கூப்டாரு..போய் பாருடா..!”னு.நானும் பயந்துகிட்டே போனன்.ஒரு மிரட்டல் குறலோடு..” வாடா…நீ தான் அந்த பையன் கைய ஒடச்சவனா..!“. பயந்துக்கிட்டே..”சார்.நான் மட்டும் இல்ல..என்கூட சேர்ந்து நிறையபேர் புடிச்சாங்க.சார்”அப்டினு சொன்னன்.”அப்படியா..! எல்லாரும் உன்ன தாண்டா சொல்ட்றாங்க..போ போயி ஒழுங்கா படிக்கிற வழிய பாரு போ”னு சொன்னாரு.


அன்னிக்கு..வீட்டுக்கு போய்ட்டு அம்மாக்கிட்ட சொல்லவே இல்ல..சரியா..சாப்டவும் இல்ல..!சீக்கிரமா தூங்க போய்ட்டன்..ஆனா நைட் புல்லா தூக்கம் வரவே இல்ல.மறுநாள் சுதந்திர தினவிழா.காலையிலே சீக்கிரமா. எழுந்து குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கெளம்பி போய்ட்டன்.ஹாஸ்பிட்டல் போன அந்த பையனுக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுனு ஒரே பதற்றமா இருந்துச்சி.ஸ்கூல்ல..ஊர் பஞ்சாயத்து தலைவர் கொடியேத்திட்டு மைக்ல பேசிக்கிட்டு இருந்தார்.நாங்களாம் தரைல உட்காந்து கவனிச்சிக்கிட்டு இருந்தோம்.அப்போ ஒருத்தர் சைக்கிள்ல வந்து, சைக்கிள நிறுத்தி ஸ்டேண்டு போட்டுட்டு..என் பக்கத்துல வந்தாரு.வந்து என் கைய புடிச்சி அந்த கூட்டதுல இருந்து வெளிய இழுத்துக்கிட்டு போனாரு.எனக்கு யாருனே தெரியல..எதுக்கு இழுத்துக்கிட்டு போறாருனும் புரியல..


வெளிய தர்ற தர்றனு .. இழுத்துக்கிட்டு போய்..”என் பைய கைய ஒடச்சவன் நீதான டா..”அப்படினு..கனமா கன்னதுல அடிச்சிட்டே இருந்தாரு..நா அழுக ஆரம்பிச்சிட்டன்..ஊர்க்காரங்க,டீச்சர்ஸ் யெலாம் வந்து அவர திட்ட ஆர்ம்பிச்சிட்டாங்க..”சின்ன பையன போட்டு இப்படி அடிக்கிற..விளையாடுனா..அப்படி இப்படினு ஆகதான் செய்யும்..அதுக்கு இந்த பையன போட்டு இப்படி அடிக்கிற”னு.அதுல குமார் னு ஒரு சார் ”நீ வண்டியில ஏருடா நாம போலிஸ்டேசன் போய் கம்ப்ளெய்ன் குடுக்ளாம்..எப்படி அவன் ஸ்கூல்ல படிக்கிற பையன புடிச்சி அடிக்ளாம்..”அப்படினு எல்லாரும் எனக்கு சப்போர்ட் பன்னி பேசுனாங்க.நான் “தேம்பி…தேம்பி “அழுதுக்கிட்டே இருந்தன்.இதையும் நான் அம்மாகிட்ட சொல்லவே இல்ல..ஸ்கூல் பக்கத்து ஊர்ல இருந்ததால..அம்மாக்கும் இந்த விசயம் தெரியல..


மறுநாள் வழக்கம் போல..ஸ்கூலுக்கு போனன்..அன்னிக்குஅந்த பையன் கைய்ல கட்டு போட்டுகிட்டு வந்திருந்தான்.அவன பாத்துட்டு அப்படியே..கொஞ்சம் தூரத்திலேயே நின்னுட்டன்.அவன் என்ன தலைய மட்டும் ஆட்டி என்ன கூப்பிட்டான்.நானும் அவன் பக்கதுல போய்..சாரி கேக்லாம்னு வாய தொறந்தான்..அதுக்குள்ள அவன்” சாரி..என் அப்பா உன்ன அடிச்சது எனக்கு தெரியாது..முன்னாடியே தெரிஞ்சிருந்தா.தடுத்துருப்பன்..”னு சொன்னான்..அவன் நல்ல மனசு எனக்கு புரிஞ்சது.உடனே..அவன கட்டிபுடிச்சிக்கிட்டு அழுதன்..”சாரி டா..”அப்படினு...அப்புறம்.நானும் அவனும் நல்ல நண்பர்களாய்ட்டோம்..ரெண்டு பேரும் நல்லா படிக்க ஆரம்பிச்சோம்..!


(பள்ளிப்பருவத்திலே மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தாமல்,பகை சேராமல்,விட்டுக்கொடுக்கும் பண்புகளோடு மன்னிக்கும் குணங்களுடன் நல்ல நண்பர்களாக..திகழ வேண்டும்)

-இல.விஜய்

எழுதியவர் : இல.விஜய் (14-Feb-16, 10:24 pm)
சேர்த்தது : இலவிஜய்
பார்வை : 194

மேலே