மரமாகிய நான்
சாலைகள் விரிவாக்கத்தில்
எங்கள் சோலைகள்
அழிந்தது.
நிழல் தேடி
நீங்கள் வெகுதுரம்
பயணம் செய்யவா.
தூலி கட்டி விளையாடிய
எங்கள் கிளைகள்
திசைக்கொன்றாய்
பயணப்படுகிறது,
எரிக்கவா,செதுக்கவா.
வளர்ந்த பின் சாய்காதே
உன் பிள்ளை போல்தான் நானும்.
விதைக்குமுன் யோசி.
யாசிக்கிறேன்
நம் சுவாசம் ஒன்றே,
நண்பனாகிவிடு
சேர்ந்தே வளர்வோம்.
மரத்தின் நிழலில்லிருந்த்து
மனம் (வெந்து)வந்து
மரம் சொன்னதை
எழுதுகிறேன்.