Shruthi
வேத பாட சாலை
வேதத்திற்கு ஸ்ருதி என்ற பெயரும் உண்டு. கேட்கப் பெறுவது எதுவோ அதுவே ஸ்ருதி.எழுதிப் படிக்காமல் பரம்பரை பரம்பரையாக வாயால் சொல்லிக் காதால் கேட்டே வேதம் தலைமுறையாக வந்து இருபதால் ஸ்ருதி என்ற பெயர் வந்தது.'ழ' வுக்கும் 'ள' வுக்கும் உள்ள ஓலி மாதிரி எழுத்து வடிவில் கொண்டு வர முடியாத பல ஓலிகள்
வேதத்தில் உண்டு.
வேதத்தைத் தமிழில் மறை என்றும் சொல்லப் படுகின்றது
மறைத்து இரகசியமாகக் கப்பாரற்றப் பெற வேண்டியது என்று பொருள்.மறைவான பொருளைக் கொண்டது என்றும் பொருள் கொள்ளலாம்.மேலும் வேதத்தினால் ஏற்படும் பயன் முழுவதும் உடனே தெரிந்து விடாது.
இப்போது மறைந்திருந்து பிறகு தான் தெரியும்.
ஓத்து என்றும் வேதத்தைத் தமிழில் சொல்லப் படுகின்றது.
எது எழுத பெறாமல் ஓதப் பெற்றே வருகிறதோ
அது ஓத்து ஆகிறது.
வேத பாட சாலை
நகரத்தார்கள் வேத பாட சாலையை உருவாகினார்கள்.பிராமணர்கள் குழந்தைகளும் ,சிவசாரியர் குழந்தைகளும் இங்கு கல்வி கற்றனர்.அவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி நல்ல முறையில் செய்து கொடுக்கப் பட்டது.
அவர்களது குறிக்கோள் இதுவே.
வேத பாட சாலையின் கிளைகள் பட்டமங்களம் மற்றும் கோவிலூர்
அமைந்து உள்ளது.
இது தனியார் கல்வி கூடம் என்றாலும் ஒரு பல்கலை கழகத்தைப் போல வ்குப்புகள் .
நடைபெறுவதும் கருத்தரங்குகள் நடைபெறுவதும் காண்போரை வியப்படையச் செய்கிறது.
கணினியில் கிரந்த லிபி சொல்லிக் கொடுக்கப் பெறுகிறது.இங்கு கற்பிக்கப் பெறுகிறது
வேதம்,
ஆகமம்
திருமுறை
சைவசித்தாந்தம்
திருமுறை மற்றும் சைவசித்தாந்தம் கற்று கொடுப்பதால் மாணவர்கள் சிறந்து விளங்குகிறது.
சோதிடம் இங்கு கற்பிக்கப்படுகிறது.
வேத பாட சாலை உருவாகிறதுக்கு காரணமானவர்கள்
சிவாசாரியார்
கணேஷ் கனபாடிகள்
சுந்தரம் ஐயர்
தேவகோட்டை சைவ சித்தாந்த சரபம்
அமராவதி கருப்பன் செட்டியார்
கண்டனூர் காசி செட்டியார்
காரைக்குடி மெய்யப்ப செட்டியார்
குருவிகொண்டான் பட்டி அழகு செட்டியார்
சொ.அழகப்ப செட்டியார்
சி.என்.ஜெயராமன்
எல்.ஆர்.எம்.லக்ஷ்மணன் செட்டியார்
தேவகோட்டை முத்து வீரப்ப செட்டியார்
கண்டனூர் செல்வ கணபதி செட்டியார்
செய்திகள்
SHRUTHI;
'Hearing', Sacred knowledge revealed to the ancient sages and subsequently orally transmitted from generation to generation.
The term usually refers to the vedhas and the Brahmanas ,the Upanishads and other works.