அயல்நாட்டில் எங்களின் வாழ்க்கை 555
அயல்நாட்டு வாழ்க்க...
வளைகுடா நாடுகளில் எண்ணெய் உற்பத்தி அதிகம் என்றாலும் அதனை கப்பல் மூலமாக மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.இங்கு நடப்பது மன்னர் ஆட்சியே.எண்ணெய் உற்பத்தியை போல் இங்கு கட்டுமான தொழில்களும் அதிகம் உள்ளன.
இங்கு பெரும்பாலும் வேலை பார்ப்போர் இந்தியா,பாகிஸ்தான்,பிலிப்பைன்ஸ்,ரஷ்யா,அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கட்டிடகலை வல்லுனர்களும்.இந்தியா,பாகிஸ்தான்,பிலிப்பைன்ஸ்,இலங்கை.வங்கதேசம்.போன்ற நாடுகில் இருந்து கட்டிட தொழிலாளர்களும் இங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்கின்றனர்.இருந்தாலும் இங்கு அதிகதுறைகளில் வேலை பார்ப்பது இந்தியர்களே.
இவர்கள் அனைவரும் பெற்றெடுத்த தாய் தந்தையரையும்,மனைவி குழந்தைகளையும்,உற்றார் உறவினரையும்,காதலியையும் விட்டு பிரிந்து ஆயிரகணக்கான மைல்கல் கடந்து,கடன்.வறுமை.கஷ்டம் என்று ஒட்டுமொத்த சுமையோடு தன்னந்தனியாக புறப்பட்டு தனிமரமாய் தன்னம்பிக்கையோடு வருகிறார்கள்.
இங்கு நம் இனிய தாய் மொழி தமிழை மட்டும் தெரிந்துகொண்டு வருபவர்கள் முதலில் முதலில் பாஷை தெரியாமல் தடுமாறினாலும் படிப்படியாக பாஷைகளையும் கற்றுக்கொண்டு வேலை திறமையும் வளர்த்துகொண்டு சாதாரண வேலையாட்களாக வந்தவர்கள் கூட பதவி உயர்வு பெற்று நல்ல நிலைமையில் உளளவர்கள் ஏராளம்.தன குடும்ப கஷ்டங்களை என்னிக்கொண்டு உழைக்கும் வயதினை கடந்த முதியவர்களும் இங்கு உண்டு.இவர்களை காணும்போதுதான் கண்ணீர் காய்ந்த எங்கள் விழிகளிலும் கண்ணீர் வழிகிறது.
இங்கு திருமணம் ஆகாத இளைஞர்களும் அதிக அளவில் உண்டு.இவர்கள் இங்கு தொடர்ச்சியாக நான்கு,ஐந்து ஆண்டுகள் இங்கேயே இருந்துவிடுகிறார்கள்.இவர்களுக்கு திருமண ஏற்ப்பாடு நடைபெறும் தருணத்தில்தான் இரண்டு மூன்று மாதங்கள் விடுமுறையில் பெரும்பாலானோர் தாயகம் வருகிறார்கள்.இந்த குறுகிய நாட்களை தன்னுடைய வாழ்க்கி துணியை தேர்ந்தெடுத்துக்கொண்டு உற்றார் உறவினர் முன்னிலையில் திருமணம் செய்துகொள்கின்றனர்.இவர்கள் தாம்பத்திய வாழ்க்கை முடிந்து குடும்ப வாழ்க்கைக்குள் நுழையுமுன்னே மீண்டும் வளைகுடா நாட்டிற்கு விமானம் ஏறுகிறார்கள்.
திருமணமான இளம் ஜோடிகள் வாழ்க்கையில் ஒருவர் மனதை ஒருவர் புரிந்துகொள்ளாத நிலையில் பிரிவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.கணவன் மனைவியை விட்டு வந்த மனகஷ்டதோடு இங்கு மீண்டும் தொடங்குகிறான் வேலையை பணகஷ்ட்டதிற்காக.இவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம்.அதுவரை இவர்கள் பாசத்தை தொலைபேசியில் மட்டுமே பரிமாரிக்கொள்கிறார்கள்.இவர்களுக்கு பிறந்த குழந்தை தத்தித்தாவும் அழகினை கண்டு ரசிக்க முடியாமலும்.நம் இனிய தமிழ் மொழியில் அம்மா அப்பா என்று அழைக்கும் மழலைமொழியினை கேட்டு ரசிக்காத செவியுமாய்,தன குழந்தைகளை தொட்டு தூக்கி கொஞ்சிரசிக்க முடியாத கைகளுமாய் தன் பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அருகில் இருந்து பார்த்துக்கொள்ள முடியாத மகனுமாய்.இபப்டி அன்றாடம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அருகில் இருந்து பார்க்க முடியாத கனவுனுமாய் இந்த கடல் தாண்டிய வாழ்க்கையில் ஏற்படுகிறது.
இங்கு சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில் எதிர்கொண்டு வேலை என்னும் போர்க்களத்தில் வேர்வை சிந்தி.உடலை நடுங்கவைத்து உறைய வைக்கும் குளிரிலே மன உறுதியோடு களம் இறங்குகிறார்கள் கட்டிடவேலையிலே வேலை செய்யும் வேகத்திலே குளிரும் மிரண்டு ஓடுகிறது வெகுதூரத்திலே,கட்டிடத்தின் சாரத்திலே நாற்பதுமாடியில் கால்வைத்து நிற்கவேண்டும் ஓரத்திலே இப்படி ஆபத்தான வேலைகளை அன்றாடம் சந்திபப்து சகஜம்.இது வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் அனைவரும் சந்திப்பது ஒன்று.
இவர்கள் அனுப்பும் ஒவ்வொரு ரூபாயும் தண்ணீராக நினைக்காமல் கண்ணீராக நினைத்து செலவு செய்யுங்கள்.இவர்களின் ஒவ்வொரு துளி வியர்வையிலும் துளி குருதியும் கலந்தே சிந்துகிறது என்று மறவாதீர்கள்.இங்கு படித்தவர்கள் ,படிக்காதவர்கள்,வேலை தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் வயதானவர்கள் எல்லோருக்கும் வேலை கொடுக்கும் வளைகுடா நாடுகளுக்கு எனது நன்றிகள்.
[வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் எங்கள் வாழ்வினை குரால் வடிவில் எனக்கு அனுப்பிய முகம் தெரியாத நண்பர்காக]